மேலும் செய்திகள்
எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு முதல்வர் நியமனம்
03-May-2025
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 2 ல் துவங்குவதாக முதல்வர் நளதம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை கவுன்சிலிங் மூலம் நடைபெற உள்ளது. ஜூன் 2 ம் தேதி சிறப்பு பிரிவான மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவ வீரர் வாரிகளுக்கு நடக்கும். ஜூன் 4 ம் தேதி அறிவியல் பாடப்பிரிவு, ஜூன் 5 ம் தேதி கலை பாடப்பிரிவு, ஜூன் 6 ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.பிளஸ் 1, 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, வருமான சான்று நகல், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ 2 உடன் பங்கேற்க வேண்டும். பாட வாரியாக கட்டண விபரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மாணவிகள் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லுாரி இணையதளமான https.//gacwsvga.edu.inல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
03-May-2025