மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
21-Sep-2024
திருப்புத்துார்: திருப்புத்துாரில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் இப்றாம்சா வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன்,பாஸ்கரன் சிறப்புரையாற்றினர்.முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் சேர்மன் சிதம்பரம், சிங்கம்புணரி சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர்கள் சிவமணி, வடிவேல்,ராஜா, ஜெ பேரவை இணைச்செயலாளர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நவநீதபாலன், பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் ராபின் சையது முகமது, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகர்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் குமா.காந்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
21-Sep-2024