உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விதைப்பு பணியை ஒத்திவைக்க வேளாண்துறை அறிவுறுத்தல்

விதைப்பு பணியை ஒத்திவைக்க வேளாண்துறை அறிவுறுத்தல்

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் நெல் விதைப்பு பணிகளை ஒத்தி வைக்க வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து சராசரிக்கும் குறைவாக பெய்தது. இதனால் விவசாய பணிகள் வழக்கம் போல் நடைபெறவில்லை. பலரும் விதை நெல்களை இருப்பில் வைத்து நாற்றங்கால் விதைப்போ, நேரடி விதைப்போ செய்யாமல் மழைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்யத் துவங்கியது. அக்.21 ல் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தது. நேற்று வரை மழை தொடர்ந்தது. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளில் இறங்க தயாராயினர். ஆனால் வேளாண்துறையினர் ஒரு வாரத்திற்கு விதைப்பு பணிகளை ஒத்திவைக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சில நாட்கள் தொடர் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தற்போது விதைப்பதால் விதைகள் அழுகும் வாய்ப்புள்ளது. இதனால் நவ. முதல் வாரத்தில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி