உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழகத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு பூச்சி நோய் விழிப்புணர்வு காலண்டர் வேளாண்மை துறையினர் ஏற்பாடு

தமிழகத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு பூச்சி நோய் விழிப்புணர்வு காலண்டர் வேளாண்மை துறையினர் ஏற்பாடு

சிவகங்கை:தமிழகத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு பூச்சிநோய் விழிப்புணர்வு வழிகாட்டி காலண்டர்களை வேளாண்மை துறையினர் விநியோகித்து வருகின்றனர்.தமிழக அளவில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, பருத்தி உட்பட ஏராளமான பயிர் வகைகளை பயிரிடுகின்றனர். விவசாயிகளுக்கு பருவமழை காலம், பூச்சி தாக்குதல் போன்ற நேரங்களில் ஆலோசனை வழங்க மாவட்ட வாரியாக வேளாண்மை இணை இயக்குனரின் கீழ் உதவி வேளாண் அலுவலர் வரை பணிபுரிகின்றனர்.தென்னை, பருத்தி, நிலக்கடலை, வாழை, நெல் போன்றவற்றில் ஏற்படும் பல்வேறு வகையிலான பாதிப்புகள் குறித்து உரிய விளக்கம் பெற விவசாயிகள், வேளாண் அதிகாரிகளை நாடி வரும் சூழல் ஏற்படுகிறது.இதனால் சில நேரங்களில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு காலாண்டர்களை வேளாண்மை துறையினர் விநியோகித்து வருகின்றனர்.

2 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க முடிவு

விவசாயிகள் கைகளிலேயே பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கண்டறிந்து உடனடி மருந்து தெளித்தல், உரமிடுதல் போன்ற விபரங்கள் அடங்கிய 'பூச்சி நோய் விழிப்புணர்வு' காலண்டர்களை தயாரித்து வேளாண் துறை 2 லட்சம் பேருக்கு வழங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு குறைந்தது 500 முதல் அதிக பட்சம் 3,000 வரை இக்காலாண்டர்கள் விநியோகிக்கப்படுகிறது. காலண்டர்களில் தென்னை, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் போன்றவற்றை தாக்கும் நோய்கள், பூச்சிகள் குறித்து விளக்க படங்களுடன், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்தந்த மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் உடனுக்குடன் தங்கள் பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்கள் குறித்து அறிந்து செயல்பட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ