உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / யூரியாவுடன் இணை பொருள் உரக்கடை லைசென்ஸ் ரத்து: வேளாண் துறை எச்சரிக்கை 

யூரியாவுடன் இணை பொருள் உரக்கடை லைசென்ஸ் ரத்து: வேளாண் துறை எச்சரிக்கை 

சிவகங்கை: விவசாயிகளுக்கு யூரியாவுடன் இணை பொருட்களை சேர்த்து விற்பனை செய்தால் உரக்கடை லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது பெய்த பருவ மழையை நம்பி அனைத்து வட்டாரங்களிலும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வழங்க யூரியா 1,754 டன், டி.ஏ.பி., 1,443 டன், பொட்டாஷ் 578 டன், காம்ப்ளக்ஸ் 2,329 டன் வரை தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, இம்மாவட்டத்திற்கு உரங்கள் வினியோகம் செய்யும் உற்பத்தி நிறுவனங்கள், இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே விற்பனையாளர்களுக்கு யூரியா வழங்குவதாகவும், இவ்வாறு பெறப்பட்ட யூரியா உரத்தை, சில்லரை விற்பனையாளர்கள் இணை பொருட்களை வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படும் என கட்டாயப்படுத்துவதாகவும், கூடுதல் விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகார் கூறினர். இது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மீறிய செயலாகும். இது போன்று தொடர் புகார்கள் வந்தால் உரக்கடை லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இது குறித்து விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குனர், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை