உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்  

சிவகங்கையில் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம் துவக்கம்  

சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., வினர் தேர்தல் பிரசாரத்தை துவக்கினர். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர் செயலாளர் ராஜா வரவேற்றார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், அருள் ஸ்டீபன் பங்கேற்றனர். * திருக்கோஷ்டியூர், ஆலம்பட்டியில் அ.தி.மு.க., பூத் கமிட்டி, கிளை நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரசார பயிற்சி முகாம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், சிங்கம்புணரி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோபி ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ