வாக்காளர் திருத்தப்பணி விண்ணப்பம் கட்சி பூத் ஏஜன்ட்கள் பெற எதிர்ப்பு கலெக்டரிடம் அ.தி.மு.க., புகார்
சிவகங்கை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மட்டுமே வாக்காளர்களிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெற வேண்டும் என சிவகங்கையில் கலெக்டர் பொற்கொடியிடம், அ.தி.மு.க.,வினர் புகார் மனு அளித்தனர். நவ.,4 முதல் டிச., 4 வரை வாக்காளர் தீவிர சிறப்பு (எஸ்.ஐ.ஆர்.,) திருத்தப்பணிக்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி அலு வலர்கள் மூலம் வாக் காளர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் இருந்து ஓட்டுச்சாவடி அலுவலரே நேரடியாக பெற வேண்டும். ஆனால், பெரும் பாலான இடங்களில் கட்சி ஓட்டுச்சாவடி ஏஜன்ட் களுக்கு வழங்கிய ஆலோசனை கூட்டத்தில், கட்சி யின் பூத் ஏஜன்ட்களே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் பெற்று ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என தெரிவித்து உள்ளனர். இதற்கு அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க மாவட்ட செயலாளர் களுக்கு உத்தரவிட்டார். சிவகங்கை கலெக்டர் பொற்கொடியிடம் நகர் செயலாளர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் கோபி, கருணாகரன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் வழங்கினர். அ.தி.மு.க.,வினரிடம் கலெக்டர் கூறியதாவது: வாக்காளரிடம் திருத்தப் பணி விண்ணப்பத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தான் வழங்கி, பூர்த்தி செய்ததும் அந்த விண்ணப்பத்தை அவர்களே பெற வேண்டும். வேறு யாரையும் வாங்க அனு மதிக்க கூடாது. அதே நேரம் ஓட்டுச்சாவடி அலுவலர் களுடன், கட்சி ஏஜன்ட்கள் செல்லலாம் என்றார்.