எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மரியாதை
சிவகங்கை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கையில் அவரது சிலைக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர்தாஸ், கோபி, கருணாகரன், செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் வழக்கறிஞர் ராஜா, நகர் செயலாளர் என்.எம்.,ராஜா, நகர் இளைஞரணி செயலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * அ.ம.மு.க., சார்பில் நகர் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் மாவட்ட மாணவியர் அணி செயலாளர் தனம் அபிநயா பாண்டிக்குமார், நிர்வாகிகள் உதயகுமார், கண்ணன், மகேந்திரன், சீனிவாசன் பங்கேற்றனர். * அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நகர் செயலாளர் கே.வி., சேகர் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.சுந்தரபாண்டியன், மாவட்ட மகளிரணி கயல்விழி, தொகுதி செயலாளர் நாகராஜன், மாவட்ட வர்த்தக அணி கார்த்திகை சாமி, நகர் துணை செயலாளர் பாலசுப்பிரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். * தேவகோட்டை: தேவகோட்டை அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ.,மாலை அணிவித்து மரியாதை செய்தார். தியாகிகள் பூங்காவில் நகர் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், ஜெ.பேரவை துணை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர். சங்கரபதிகோட்டையில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு வி.ஏ.ஓ., சங்க நிறுவனர் போஸ் தலைமையில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மாலை அணிவித்தார். சங்க நிர்வாகிகள் காசிநாதன், ரங்கசாமி, வடிவேலு, சுபராமு, ராஜேந்திரன், முகமது ரபீக், கிருஷ்ணன், காளைராஜன் பங்கேற்றனர். * திருப்புத்துார்: நகர் செயலாளர் இப்ராம்சா தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, பொதுக்குழு சிதம்பரம், முன்னாள் ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு பங்கேற்றனர்.