உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம். எல்.ஏ.,க்கள் உமாதேவன், நாகராஜன், கற்பகம், மானாமதுரை ஒன்றிய செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், ஸ்ரீதரன், நகர செயலாளர் விஜிபோஸ், இளையான்குடி ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், கோபி, நகர செயலாளர் நாகூர் மீரா உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை