உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் 3 டி வடிவில் அழகப்பர் உருவ ஓவியம்

காரைக்குடியில் 3 டி வடிவில் அழகப்பர் உருவ ஓவியம்

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி 75வது ஆண்டை முன்னிட்டு, பள்ளிசுவற்றில் 3 டி வடிவில் ஓவியம் வரைந்து ஓவிய ஆசிரியர் முத்துப்பாண்டி அசத்தியுள்ளார். இப்பள்ளி 75ம் ஆண்டு பவள விழா கொண்டாடி வருகிறது. பள்ளி காம்பவுண்ட் சுவரில் அழகப்பர் உருவ, பவள விழா ஓவியம்,6ம் வகுப்பு மாணவரின் தத்ரூப உருவத்தை ஓவியமாக வரைந்துள்ளார். ஆசிரியர் கூறியதாவது:இந்த ஓவியம் வரைய 2 வாரம் ஆனது. எப்பக்கம் நின்ற பார்த்தாலும் ஒரே மாதிரி தெரியும். இரவு, பகல் எப்போது பார்த்தாலும் மாணவர் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்று வரைந்துள்ளேன். தலைகுனிந்து படித்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதை மையமாக வைத்து, ஓவியம் வரைந்தேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை