பழைய மாணவர்கள் சந்திப்பு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பின் பள்ளியில் சந்தித்து மகிழ்ந்தனர்.இப்பள்ளியில் 1982 முதல் 1990 வரை எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் நண்பர்களுடன் பேசினர். 35 ஆண்டுகளுக்கு பின் நேற்று மாலை பள்ளியில் சந்தித்தனர். தாளாளர் அற்புத அரசு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் செலின் தெரசா வரவேற்றார். பழைய மாணவர்கள் தங்களுக்குள் கைகுலுக்கி வரவேற்று கொண்டனர். வகுப்பறைகளில் கூடி தங்கள் பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.