உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆனந்தவல்லி சோமநாதர் சித்திரை திருவிழா; சந்தனக்காப்பு அலங்காரம் இன்று ஆற்றில் இறங்கும் அழகர்

ஆனந்தவல்லி சோமநாதர் சித்திரை திருவிழா; சந்தனக்காப்பு அலங்காரம் இன்று ஆற்றில் இறங்கும் அழகர்

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா சந்தன காப்பு உற்ஸவத்துடன் நேற்று நிறைவு பெற்றது. இன்று வீர அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் சித்திரை திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுடன் வாகனங்களில் வீதி உலா வந்தார். மே 8 ம் தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், மே 9 ல் தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை தீர்த்தோற்ஸவம்,பிரதோஷம் நடைபெற்று, இரவு மண்டகப்படியில் சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார். நேற்று சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினர். இன்று காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் வீர அழகர் எழுந்தருள்வார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eyyqbplv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை