மேலும் செய்திகள்
ஊழியர் சங்க பேரவை கூட்டம்
13-May-2025
சிவகங்கை, : சிவகங்கையில், ஊழியர் மீதான தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். பொருளாளர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் துவக்க உரை ஆற்றினார். மாநில பொது செயலாளர் டெய்சி கண்டன நிறைவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மின்வாரிய ஊழியர் மத்திய கூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத் கண்டன உரை ஆற்றினார். மாநில பொருளாளர் தேவமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கண்டன உரை ஆற்றினர். பிற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க மாவட்ட துணை தலைவர் தவமலர் நன்றி கூறினார். அங்கன்வாடி ஊழியர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் கல்லல் சி.டி.பி.ஓ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளார் அங்கன்வாடி பணியாளரின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
13-May-2025