மேலும் செய்திகள்
தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதி வசூல்
17-Nov-2024
சிவகங்கை: சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதி அடிப்படையில் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறுகையில், சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) கபீர் புரஸ்கார் விருதினைப் பெறத் தகுதியுடையவராவார்கள்.இவ்விருதானது ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற ஜாதி இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையின் போதோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.கபீர் புரஸ்கார் விருதானது மூன்று அளவுகளில் தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு முறையே ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000க்கான காசோலை வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் 2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு டிச.15க்குள் http://award.tn.gov.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
17-Nov-2024