உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விசாரணை அதிகாரி நியமனம்

விசாரணை அதிகாரி நியமனம்

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி இறந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சிவகங்கை ஏ.டி.எஸ்.பி., சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி தெரிவித்தார்.சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி ஆய்வு செய்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திடம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் இறப்பு குறித்தும் விசாரணை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது: தற்போது 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்தும் அஜித்குமார் இறப்பு குறித்தும் முழுமையாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி., சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் விசாரணை அறிக்கையும், போஸ்ட்மார்டம் அறிக்கையும் வந்த பிறகு தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி