உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்   

 வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நியமனம்   

சிவகங்கை: புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் திருத்த முகாம் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி 2026 ஜன., 1 ம் நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் டிச., 27 மற்றும் 28 ல் நடந்தது. அடுத்த முகாம் ஜன., 3, 4 ல் நடக்கிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் அருண்தம்புராஜ் ஜன., 3 ல் நடக்கும் முகாமை பார்வையிட உள்ளார். ஜன., 3 அன்று மதியம் 12:30 மணிக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக பொதுமக்கள், சர்வ கட்சியினர் அவரிடம் தகவல் தெரிவிக்க விரும்பினால் அலைபேசி எண் 73581 50776ல் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ