உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பொதுத் தேர்வுகளில் சாதித்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. சுவரன்மாறன் பாரி வள்ளல் கல்வி அறக்கட்டளை துணைச் செயலாளர் காளைலிங்கம் வரவேற்றார். பொருளாளர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைப் பொருளாளர் குருசாமிகுமார் முன்னிலை வகித்தார். கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சுவரன் மாறன் பாரிவள்ளல் கல்வி அறக்கட்டளை சார்பில் கெளரவிக்கப்பட்டனர். டாக்டர் மணிவண்ணன், கருமலையான் கல்வி அறக்கட்டளை செயல் தலைவர் பாலசுப்பிரமணியன், நல்லாசிரியர் மாரிமுத்து, பேராசிரியர் ஜெகதீசன், வக்கீல் ரமேஷ், அர்ச்சுணன், மேற்பார்வையாளர் கவிமுரசு அய்யாச்சாமி, பேராசிரியர் சந்திரசேகரன், ராஜன் ஆகியோர் வாழ்த்தினர்.ஆசிரியர் பாலகுருநாதன் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ