உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஹிந்து அறநிலையத்துறை கோயில்களில்  சம்பளமின்றி அர்ச்சகர், பூஜாரி தவிப்பு  மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா..

ஹிந்து அறநிலையத்துறை கோயில்களில்  சம்பளமின்றி அர்ச்சகர், பூஜாரி தவிப்பு  மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா..

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பூஜாரி, ஊழியர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.இம்மாவட்டத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் 956 கோயில்கள் செயல்படுகின்றன. இவற்றில் 400க்கும் மேற்பட்ட கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பூஜாரி, சமையலர், உதவியாளர், கோயில் சுத்தம் செய்பவர்உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு கால பூஜை செய்யும் கோயிலுக்கென ஒரு தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை வைத்து தான், அங்கு பணிபுரியும் பூஜாரி, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகின்றனர். மற்ற படி 2 கால, மூன்று கால பூஜைகள் நடக்கும் பெரிய கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பூஜாரி, உதவியாளர் உள்ளிட்டோருக்கு குறைந்தது மாதம் ரூ.12,000 முதல் அதிகபட்சம் ரூ.18,000 வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஹிந்து அறநிலையத்துறை மூலம் வழங்கப்படும் சம்பளத்தை கடந்த 2 மாதமாக வழங்கவில்லை. இதனால், அர்ச்சகர், பூஜாரி, ஊழியர்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஹிந்து அறநிலைய நிர்வாகம் சம்பளத்தை நிலுவையுடன் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஹிந்து அறநிலைய அதிகாரிகள் கூறியதாவது:அரசு கோயில்கள் தோறும் அறங்காவலர்களை நியமித்துவிட்டது.அதே நேரம் தக்கார் பதவியில் உள்ளோருக்கு மட்டும் தான் சம்பளம் வழங்கும் அதிகாரம் உண்டு. இதனால் தக்கார் பதவி வழங்கும் பணி இழுபறியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சம்பளம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !