உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளியில் கலைத் திருவிழா

பள்ளியில் கலைத் திருவிழா

திருப்புத்துார் : திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடந்தது. தலைமையாசிரியை தவமணி துவக்கி வைத்தார். பி.இ.ஓ.,க்கள் குமார், சாந்தி முன்னிலை வகித்தனர். நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். சிறப்பாக திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.இளையான்குடி: இளையான்குடி ஒன்றியத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இளையாங்குடி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் சார்லஸ், டேவிட் ரொசாரியோ, ஜஸ்டின் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரான்சிஸ் தொடங்கி வைத்தனர்.தலைமை ஆசிரியர் முஹம்மது இலியாஸ் பேசினார்.வட்டாரக்கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சாத்தனூர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், கச்சாத்தநல்லுார் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கலையரசி, கோட்டையூர்தலைமை ஆசிரியர் மார்டின் பங்கேற்றனர். 42 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை