உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலை செம்மல் விருது கலெக்டர் பாராட்டு 

கலை செம்மல் விருது கலெக்டர் பாராட்டு 

சிவகங்கை : சிவகங்கையை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 40 ஆண்டாக மரத்திலான சிற்பம் செய்து வருகிறார். தமிழக அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் 18 பேருக்கு கலை செம்மல் விருது அறிவித்தது. அதில் சிவகங்கையை சேர்ந்த மர சிற்ப கலைஞர் பால்ராஜ் தேர்வானார். அவருக்கு அமைச்சர் சாமிநாதன் செப்பு பட்டய சான்று, ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கினார். விருதுடன் நேற்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தமிழ்சங்க தலைவர் கண்ணப்பன், நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை