உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணியாளர்கள் மீது தாக்குதல்

பணியாளர்கள் மீது தாக்குதல்

காரைக்குடி : சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி நவரத்தின நகரில் சுகாதார ஆய்வாளர் ஜெயசூர்யா தலைமையில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணி மற்றும் ஆய்வில் ஈடுபட்டனர்.நவரத்னா நகர் 2வது வீதி நடராஜன் என்பவரது வீட்டிற்கு ஆய்வுக்குச் சென்றனர். வீட்டின் உரிமையாளர், பணியாளர்களை ஆய்வுக்கு உள்ளே அனுமதிக்காததால் வீட்டின் உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர்களை வீட்டின் உரிமையாளர்கள் தாக்கியதாக காரைக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை