உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடகள போட்டி: சாதித்த திருப்புவனம் முதியவர்

தடகள போட்டி: சாதித்த திருப்புவனம் முதியவர்

திருப்புவனம்: மதுரையில் நடந்த 42 வது மூத்தோர் தடகளப்போட்டியில் திருப்புவனத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் துரைபிச்சை வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாநில அளவிலான 42 வது மூத்தோர் தடகள போட்டிகள் மூன்று நாட்கள் நடந்து முடிந்தன. ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், நடைப்போட்டி, உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் திருப்புவனத்தைச் சேர்ந்த துரைபிச்சை 80, பங்கேற்று ஐயாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், ஈட்டி எறிதலிலும் மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பெங்களுரூவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். 2024ல் ஈரோட்டில் நடந்த மூத்தோர் தடகள போட்டிகளிலும் மூவாயிரம் மீட்டரில் வெள்ளி பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ