உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியாளர் மீது தாக்கு

துாய்மை பணியாளர் மீது தாக்கு

திருப்புத்துார்: திருப்புத்துார் சாம்பான் ஊருணி அருகில் பேரூராட்சி துாய்மை பணியாளரை உணவு விடுதி உரிமையாளர் கம்பால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். திருப்புத்துார் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகன்50. இவர் திருப்புத்துார் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்று (நவ.,12) டிராக்டரில் குப்பை சேகரிப்பதற்காக ஓட்டி சென்றார். சாம்பான் ஊருணி வளைவு அருகில் செல்லும் போது உணவு விடுதி நடத்தும் முருகானந்தம் என்பவர், ‛என் கடை குப்பையை வாங்காமல் செல்கிறாய் எனக் கூறி முருகனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதமாகி தொடர்ந்து முருகனை அங்கு கிடந்த கம்பால் அடித்துள்ளார். அதில் முருகனின் கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. அருகிலிருந்த தூய்மைப் பணியாளர்கள் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். எஸ்.ஐ.,சுரேஷ்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை