உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை நகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்

மானாமதுரை நகராட்சியில் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்

மானாமதுரை,; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கான ஏலம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் மற்றும் உள்புறமும், வாரச்சந்தை முன்பாகவும் 25க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான பொது ஏலம் கடந்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மீண்டும் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானோர் ஏலத்தில் கலந்து கொள்ளவதற்காக ஏலத்தொகையை காசோலைகளாக செலுத்தினர். நேற்று காலை 10:00 மணிக்கே ஏலம் நடைபெறும் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க நகராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மதியம் 12:00 மணிக்கு நகராட்சி கமிஷனர்(பொ) கிருஷ்ணவேணி, மேலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏலம் துவங்கிய நிலையில் காசோலைகளை செலுத்தி டோக்கன் வாங்கிய நபர்களை மட்டும் போலீசார் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை