விருது வழங்கல்
காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலையில் என்.எஸ்.எஸ்., சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. துணை வேந்தர் ரவி சிறப்பாக சேவை புரிந்த என்.எஸ்.எஸ்., அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கு விருது வழங்கினார். பதிவாளர் செந்தில் ராஜன் முன்னிலை வகித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் ராஜாராம், அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுந்தர் வாழ்த்தினர். தேர்வாணையர் ஜோதிபாசு, பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, தொலைதுாரக் கல்வி இயக்குனர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.