3 சிறந்த பள்ளிகளுக்கு விருது
சிவகங்கை : தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்படுகிறது. 2023-2024ம் ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டதுசிவகங்கை மாவட்டம் குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிங்கம்புணரி அ.காளப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, திருப்புவனம் பழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளது. வரும் நவ.14ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தேர்வு பெற்ற சிறந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு விருதுக்கான கேடயத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்க உள்ளார்.