மேலும் செய்திகள்
புகையிலை வேண்டாம்; விழிப்புணர்வு ஊர்வலம்
31-May-2025
காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.டி.எஸ்.பி. பார்த்திபன், தாசில்தார் ராஜா பள்ளி சேர்மன் குமரேசன் தொடங்கி வைத்தனர். இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், பாஸ்கரன் சுகாதார ஆய்வாளர் முத்துவேல் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையில் பதாகை ஏந்தியும், வாசகங்களை கூறியவாறு சென்றனர். கண்ணதாசன் மணி மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
31-May-2025