உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீடுகள் முன் தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம்

வீடுகள் முன் தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கால்வாய் இல்லாமல் வீடுகள் முன்பாக தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.சிங்கம்புணரி பேரூராட்சி அருகே உள்ள அணைக் கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தர் முத்துவடுகநாதர் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல கால்வாய் இல்லாததால் ஆங்காங்கே குழிகள் மூலம் கழிவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவு நீர் தெருவில் திறந்து விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. உரிய முறையில் கால்வாய்களை அமைத்து கழிவு நீர் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை