மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்ட் இல்லாத கல்லல் போராடும் கிராம மக்கள்
03-Sep-2024
சிவகங்கை, அக்.1-கல்லல் ஒன்றியம் பாதரக்குடி குடிநீர் ஊரணியில் துாசி கலப்பதால், குடிநீரை குடிக்க முடியவில்லை என கலெக்டரிடம் கிராமத்தினர் புகார் அளித்தனர். பாதரக்குடி ஊராட்சியில் 9 வார்டுகளில் 1,800 பேர் வசிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் மேல் இக்கிராம மக்களுக்கான குடிநீர் ஊரணி உள்ளது. ரோடு விரிவாக்க பணி நடப்பதால், மண் ஏற்றி செல்லும் லாரிகளால், குடிநீர் ஊரணி மாசு அடைகிறது. இதனால், குடிநீர் குடிக்க முடியாமல் கலங்கலாக உள்ளது. அதே போன்று ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கிணறு, மின்மோட்டாரை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சும் யுகலிப்டஸ் மரங்களை அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச நகரில் தரைப்பாலம் அமைக்காததை கண்டித்தும், அனைத்து தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராமத்தினர் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். பாதரக்குடி ஊராட்சி தலைவர் பாண்டிமீனாள் கூறியதாவது: ரோடு விரிவாக்க பணி முடிந்ததும், குடிநீர் ஊரணியை சுத்தம் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். இது வரை சேதமான 8 மின்கம்பங்களை மாற்றியுள்ளோம். தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் மட்டுமே கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர், என்றார்.
03-Sep-2024