தேசிய நெடுஞ்சாலையில் பேனர் கம்பிகளால் விபத்து அச்சம்
சிவகங்கை: சிவகங்கை அருகே பெருமாள் பட்டி சந்திப்பில் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் கம்பி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை நகரின் முக்கிய சாலைகளில் விளம்பர பேனர்கள் மீண்டும் தலைதுாக்கியுள்ளன. பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.சிவகங்கையில் ரோட்டோரங்களில் பேனர்கள் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதனால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாயப்பு உள்ளது.சிவகங்கை பஸ் ஸ்டாண்ட், ராமச்சந்திர பூங்கா, அரண்மனை பகுதி உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் நிரந்தரமாகவே சிலர் பேனர் வைத்துள்ளனர்.இவற்றை நகர் போலீசார் கண்டுகொள்வதில்லை இந்த பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.அதேபோல் பெருமாள்பட்டி சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று கிழிந்து கம்பி ரோட்டின் வெளிபுறத்தில் விபத்தை ஏற்படுத்து வண்ணம் உள்ளது.இந்த பேனர் கம்பியால் இரவில் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.ரோட்டில் விபத்து ஏற்படுத்தும் வீதமாக பேனர் வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.