மதுக்கடைகள் மாற்றம்
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகளால் மக்கள் சிரமப்பட்டனர்.இந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.சாலைக் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று கேட்டிருந்தார்.அதற்கு பதில் அளித்த கலால் உதவி ஆணையர் சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த 2 கடைகளை வேறு இடத்தில் செயல்படுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கடைகளை மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதை பதிலாக தெரிவித்துள்ளார்.