உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூடைப்பந்து போட்டி கல்லுாரிக்கு  கோப்பை 

கூடைப்பந்து போட்டி கல்லுாரிக்கு  கோப்பை 

தேவகோட்டை: காரைக்குடி அழகப்பா பல்கலை அளவிலான கூடைப்பந்து போட்டி தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் நாவுக்கரசு போட்டிகளை துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி முதலிடம் வென்று கோப்பையை கைப் பற்றியது. இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லுாரி இரண்டாமிடம், சிவகங்கை ராஜா துரைசிங்கம் கல்லுாரி மூன்றாமிடம், கீழக்கரை சையது ஹமீதா கல்லுாரி நான்காமிடம் பெற்றனர். பெண்கள் பிரிவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லுாரி முதலிடம் வென்று கோப்பையை கைப் பற்றினர். காரைக்குடி அழகப்பா உடற்கல்வி யியல் கல்லுாரி இரண்டாமிடம், சிவகங்கை மகளிர் கல்லுாரி மூன்றாமிடம், ராமநாத புரம் செய்யது அம்மாள் கல்லுாரி நான்காமிடம் வென்றனர். கல்லுாரி முதல்வர் நாவக்கரசு முன்னிலையில் கல்லுாரி தலைவர் லட்சுமணன் கோப்பை, பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் லுார்து ராஜா ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ