உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரை ஐயப்பன் கோயிலில் பஜனை

 மானாமதுரை ஐயப்பன் கோயிலில் பஜனை

மானாமதுரை: மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பஜனை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மானாமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற பஜனையில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி பாடல்களை மேள தாளங்களுடன் பாடினர். ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ