பூமாயி அம்மன் கோயில் நவராத்திரி விழா செப்.,23ல் துவக்கம்
திருப்புத்தூர் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்., 23ல் துவங்குகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு மூலவர் சர்வ அலங்காரத்திலும், கொலு அலங்காரத்தில் உற்ஸவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிப்பர். திருவிளக்கு பூஜை நடைபெறும். அன்று இரவு 7:00 மணிக்கு லட்சார்ச்சனையும், தினமும் மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். தினமும் மாலையில் மீனாட்சி திருக்கல்யாணம், தட்சிணாமூர்த்தி, ஊஞ்சல், பள்ளி கொண்ட பெருமாள், சூரியனார், தந்தைக்கு உபதேசம், மகிஷாசுரமர்த்தினி, சிவ பூஜை அலங்காரத்தில் எழுந்தருள்வார். அக்.,2 ம் தேதி இரவு 8:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கும். பூச்சொரிதல் விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.