பீஹார் தொழிலாளி இறப்பு
தேவகோட்டை: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்தேவ். 60. உறவினர்களுடன் கான்ட்ராக்டர் மூலம் ரோடு போடும் வேலை செய்து வந்தார். தற்போது தேவகோட்டை ஓரியூர் ரோடு போட்டு வருகின்றனர். அப்பகுதியிலேயே தங்கி பணி செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ராம்தேவிற்கு திடீரென வேர்த்தது.உறவினர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உடலை ஒப்படைத்தனர். தாலூகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.