உள்ளூர் செய்திகள்

பா.ஜ., பிரசாரம்

திருப்புத்துார்: திருப்புத்தூரில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் தங்கபாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர்கள் சேது சிவராமன், சங்கர சுப்பிரமணியன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமனம், குடிநீர் இணைப்புகளை இலவசமாக வழங்குதல்,குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பேரூராட்சி ஏற்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ