மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / அக். 2
02-Oct-2025
காரைக்குடி : பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை காரைக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பா.ஜ., சார்பில், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் காரைக்குடியில் நடைபெறுகிறது. இதில், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். மதுரையிலிருந்து புறப்பட்டு நாளை மதியம் 2:00 மணிக்கு பிள்ளையார்பட்டியில் சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியுடன் பிரசாரம் தொடங்குகிறது. மாலை 5:00 மணிக்கு காரைக்குடி நெசவாளர் காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார். ஏற்பாடுகளை பா.ஜ., நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் செய்து வருகின்றனர்.
02-Oct-2025