மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
21-Oct-2024
காரைக்குடி: காரைக்குடியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லுாரி முருகப்பா ஹாலில் நடந்த முகாமிற்கு இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் வி.சுந்தர்ராமன் தலைமை வகித்தார். முதல்வர் கே.பாஸ்கரன், உதவி பேராசிரியர் ஆசையம்மை, சிவகங்கை லயன்ஸ் கிளப் தலைவர் ஆர்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் இணை பொருளாளர் பிஆர்.மருதப்பன், காரைக்குடி எச்.டி.எப்.சி., வங்கி மேலாளர் சண்முகராஜா, சிவகங்கை ஐ.ஆர்.சி., செயலாளர் ஏ.ஆனந்த கிருஷ்ணன், பொருளாளர் ஏ.செல்வக்குமரன், துணை தலைவர் எம்எஸ்கே., முத்துப்பண்டியன், அன்புமதி பங்கேற்றனர்.சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் சித்துஹரி, காரைக்குடி ரத்த வங்கி அலுவலர் எம்.ராஜ்குமார் தலைமையில் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். ஒய்.ஆர்.சி., மாணவர் தலைவர் எம்.மோகன பிரியா நன்றி கூறினார்.
21-Oct-2024