உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில், தமிழ்நாடு இந்திய செஞ்சிலுவை சங்க கிளை மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமையேற்றார்.இந்திய செஞ்சிலுவை சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் சுந்தரராமன் பேசினார். முன்னதாக ரத்ததான முகாம் நடந்தது.அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் பழனிச்சாமி, ராஜாராம், வேதிராஜன் ராமநாதபுரம் செஞ்சிலுவை சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளி விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் விநாயக மூர்த்தி வரவேற்றார். கணேச மூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை