சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடல், உறுப்பு தானம் வழங்கல்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உடல்களையும், பிற நோயாளிகளுக்கென உடல் உறுப்புகளை தானமாக அதிகளவில் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் 2008 முதல் உடல் உறுப்பு தானம் வழங்கலாம் என்ற திட்டம் அறிமுகம் செய்தனர். இதற்காக 2015ல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையமும் உருவாக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழக அளவில் 178 பேர், 2024ல் 268 பேர் தானம் செய்திருந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு 2015ம் ஆண்டிற்கு பின் தற்போது வரை 22 பேர் உடல்களை தானமாக வழங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டில் 14 பேர்களும், 2025ம் ஆண்டில் மார்ச் வரை 4 பேரும் உடல்களை தானமாக வழங்கியுள்ளனர்.