சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு உடல் தானம்
தேவகோட்டை : தேவகோட்டை சிதம்பரநாதபுரம் தேவசீனிசுந்தரம். இவர் நில அளவை துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இன்று அவரது உடலை கல்லுாரியில் ஒப்படைக்க உள்ளனர்.