மேலும் செய்திகள்
கண்ணதாசன் நுாற்றாண்டு விழா
24-Jun-2026
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே ந.வைரவன்பட்டியில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. 200 ஆண்டுக்கும் அதிகமான பழைய பனை ஓலை சுவடிகளில் பழமையான நகரத்தார் திருமணம் குறித்து குழிபிறை கிங்கிணிக் கூருடையார் சொக்கப்பன் செட்டி பொய் சொல்லா மெய்யன் என்பவரால் எழுதப்பட்டிருந்தது. அதை புத்தக வடிவமாக்கி நேற்று வெளியிட்டனர். நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க தலைவர் நாகப்பன் தலைமை வகித்தார். அருங்காட்சியக நிறுவனர் பழனியப்பன் வரவேற்றார். சண்முகம், செயலாளர் அய்யப்பன், பேராசிரியர் அழகப்பன் முன்னிலை வகித்தனர். அரசு பாட திட்ட குழு புலவர் திருப்பதி நூலை வெளியிட கல்வெட்டு கலைஞர் ராஜேந்திரன் பெற்றார். பேராசிரியர் வேலாயுதராஜா மதிப்புரை ஆற்றினார். நுால் பதிப்பு ஆசிரியர் இளங்கோ ஏற்புரை ஆற்றினார். ஆய்வாளர் பெரியய்யா, வாசகர் வட்டம் ஜெயச்சந்திரன் வாழ்த்தினார். சொர்ண மீனா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். //
24-Jun-2026