கால்வாயில் மூழ்கி சிறுவன் பலி
மானாமதுரை: மானாமதுரை அருகே கீழப்பசலை நடுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்து மகன் தேவநாத் 14, இவர் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டிற்கு அருகே உள்ள கால்வாயில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.