உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலப் பணியால் மடைகள் மாயம்; 150 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

பாலப் பணியால் மடைகள் மாயம்; 150 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் மேம்பால பணியின் போது, மூடப்பட்ட மடைகளை சீரமைக்காததால் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதரக்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள புது கண்மாயை நம்பி 150 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது. கண்மாயில் நடுமடை, இருபுறமும் கடை மடை என 3 மடைகள் இருந்தது. காரைக்குடி மேலுார் நான்கு வழி சாலை பணிக்காக இக்கண்மாயில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தது. இதில் விவசாயத்தின் நீர் ஆதாரமான மடைகள் மூடப்பட்டது. இதனை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் சரி செய்யவில்லை எனவும், இதனால் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில்: விவசாயத்தின் ஆதாரமான மடைகளை அமைத்து தருவதாக தெரிவித்துள்ளோம். அதற்கான பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ