மேலும் செய்திகள்
பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் அச்சம்
23-Oct-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி உயர்மட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த 2005ம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிவபுரிபட்டி தரைப்பாலம் மூழ்கி அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 2006ல் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளில் பாலத்தில் விரிசல் ஏற்படத் துவங்கியது. அதை அதிகாரிகள் தார், சிமென்ட் கலவை பூசி சரி செய்து வருகின்றனர். ஆனாலும்வெடிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பாலாற்றில் தண்ணீர் செல்லும் நிலையில் பாலத்தின் மேற்பரப்பில் நடுவில் வெடிப்பு ஏற்பட்டு கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் பட்சத்தில் இந்த பாலம் தாக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது. உடனடியாக பாலத்தை சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
23-Oct-2024