சோகத்தில் தம்பி தற்கொலை
தேவகோட்டை : தேவகோட்டை ராமலிங்கம் நகரைச் சேர்ந்த கோபால் மகன் அறிவழகன். 45., வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு திரும்பிய அவர் வேலையில்லாமல் இருந்தார். மீண்டும் வெளிநாடு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்த நிலையில், அறிவழகனின் அண்ணன் இரு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மன வேதனையடைந்த அறிவழகன் அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். நேற்று காலை வீட்டின் முன் இருந்த மரத்தில் துாக்கிட்டு இறந்தார். மனைவி அமுதா புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.