உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரையூரில் மாட்டு வண்டி பந்தயம்

காரையூரில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே காரையூரில் நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 68 வண்டிகள் பங்கேற்றன.ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல் துவக்கி வைத்தார். பெரிய மாடு பிரிவில் 21 வண்டிகள் பங்கேற்றன. அதில் முதலிடத்தை அவனியாபுரம் மோகன், இரண்டாமிடத்தை விராமதி தையல்நாயகி, மூன்றாமிடத்தை மேலச்செம்பொன்மாரி லிங்கேஷ், மாட்டு வண்டிகள் பெற்றன.சின்னமாடு பிரிவில் 47 வண்டிகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் பிரிவில் அவனியாபுரம் மோகன் முதலிடம், மாங்குடி முருகன் இரண்டாமிடம், அடுகபட்டி ஆறுமுகம் மூன்றாமிடம், வென்றனர்.இரண்டாவது பிரிவில் முதலிடத்தை நகரம்பட்டி கண்ணன், இரண்டாமிடத்தை பொய்யாதநல்லூர் அயன்அசலாம், மூன்றாமிடத்தை புதுப்பட்டி ஆதிக்ராஜா, வென்றனர். வெற்றி பெற்ற மாடு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. திறமையாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி