மேலும் செய்திகள்
மாட்டு வண்டி பந்தயம்
30-Apr-2025
திருப்புத்துார் :திருப்புத்துார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.திருப்புத்துார் குளம்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு தம்பிபட்டி ஊரார் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டிப்பந்தயம் நடத்தப்பட்டது. போட்டிகள் காரைக்குடி ரோட்டில் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. 8 மைல் துாரத்திற்கான பெரிய மாடு பிரிவில் 6 வண்டிகள் பங்கேற்றன. முதலாமிடத்தை தம்பிபட்டி மு.காத்தமுத்து விக்ரம், இரண்டாமிடத்தை தேவரம்பூர் ராமனாதன், மூன்றாமிடத்தை உப்பார்பட்டி கெளசிக் மகாதேவ் வென்றனர்.6 மைல் துாரத்திற்கான சின்ன மாடு பிரிவில் 11 வண்டிகள் பங்கேற்றன. அதில் முதலாமிடத்தை ரணசிங்கபுரம் பொன்னழகியம்மன், பாகனேரி ஆனந்தப்பார்த்திபன், திருப்புத்தூர் பூக்கடை சிலம்பு, போடி ஆண்டிச்சாமி ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
30-Apr-2025