மேலும் செய்திகள்
கோயில் திருவிழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
10-May-2025
சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. சிவகங்கை திருப்பத்துார் ரோட்டில் நடந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 10 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பிரிவில் 17 வண்டிகளும் பங்கேற்றன. இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாட்டு பிரிவிற்கு 8 கிலோ மீட்டர் துாரமும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிலோ மீட்டர் துாரமும் பந்தய எல்லையாக நிர்ணயித்தனர். முதல் நான்கு இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கு பரிசு வழங்கினர்.
10-May-2025