உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நா ளை பஸ் வழித்தட மாற்றம் 

நா ளை பஸ் வழித்தட மாற்றம் 

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர்ஆஷா அஜித் கூறியதாவது: சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு அக்.,30ல் விடுமுறை விடப்படும். காளையார்கோவிலில் அக்., 27 அன்று நடக்கும்மருதுபாண்டியர் குருபூஜைக்காக அரசு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்விரு விழாவை கண்காணிக்க 35 சிறப்பு நிர்வாக நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பஸ் வழித்தடம் மாற்றம்: அக்.,27 அன்று காளையார்கோவில் மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டி வரை செல்லும் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலுார், இடையமேலுார், சிவகங்கை, மேலுார் பைபாஸ், ஒக்கூர், நாட்டரசன்கோட்டை, கண்டுப்பட்டி, வெற்றியூர் சந்திப்பு, ஒட்டாணம், ஆண்டிச்சியூரணி, திருவேகம்புத்துார், சி.கே.,மங்கலம், திருவாடானை வழியாக தொண்டி செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ